26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
PoliticalTamilnaduVehicleViral

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நவீன கருவிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்….

முதலமைச்சர் தலைமையில் தீக்ஷா ஆய்வு கூட்டத்தில் இரண்டாவது கூட்டம் இன்று நடைபெற்றது

கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்க சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் தயாரித்துள்ள கருவியை வாங்க வேண்டும் எனவும் இதற்காக மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தலா ₹20 லட்சம் கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்..

மேலும்,பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் மாநில அரசும் இந்த திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்தார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் சரி என அழைக்கப்பட்டு வருகிறது அந்த பகுதிகளில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என தெரிவித்தார்

See also  பாஜகவின் கனவு பழிக்காது - திருமாவளவன்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் இருக்கக்கூடிய ஜாதி பெயர்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் செயல்படுவது போல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ சேவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது போல் மாநில அரசும் ஒரு கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி வரவேண்டும் எனவும் 60 கிலோமீட்டர் இடையிலான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்வதற்கான தனி ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் முதியோருக்கான ஓய்வு தொகை பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் முதியோர்கள் உதவித்தொகை பெறுவது பாதிக்கப்படுவதாகவும். அதனை திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்

See also  பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்

Related posts