சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்விதுறை அலுவலகத்தில் கல்லூரி துனைவேந்தர்களுடன் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசியவர்…
முதலமைச்சரின் ஆணையின்படி உயர்கல்வித்துறையின் பல்வேறு துறைகளுடன் ஆய்வு நடத்த வேண்டும் என்கிற அறிவுத்தலின்படி இன்று கல்லூரிகளின் துணைவேந்தர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் துணைவேந்தர்கள் கல்லூரிகளில் இருக்கும் பிரச்சனைகளை தொடர்பாகவும் பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் தொடர்பாகவும் விவாதித்ததாக தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்ட பாடத்திட்டங்களைப் போல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை பெறுவது மற்றும் இல்லாமல் வேலை அளிப்பவர்கள் அளிப்பவர்களாக மாற வேண்டும் எனும் எண்ணத்தில் சில பாடத்திட்டங்களை தமிழக கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் பங்கு பெற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவித்தார்
அனைத்து பல்கலைக்கழங்களிலும்
முதல் 4 செமஸ்டரில் தமிழ், ஆங்கிலம் அனைத்தும் கற்று தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் கணிதம் மற்றும் இயற்பியல் துறைகளில் மாணவர் சேர்க்கை குறைந்து இருக்கும் தகவலை முன்னிட்டு கணிதம் இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும் என உயர்கல்வி துறையின் சபை மூலமாக உருவாக்கப்பட்டுள்ளதாய் தெரிவித்தார்
பாட திட்டங்களை துணைவேந்தர்கள் ஆராய்ந்து அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அறிவுறுத்தும் படி கேட்டுக் கொண்டுள்ளதாய் தெரிவித்தார். மேலும்,அடுத்த ஆண்டிலிருந்து பாடத்திட்டங்களில் பெரிய மாற்றம் இருக்கும் என குறிப்பிட்டார்.
பச்சையப்பாஸ் கல்லூரி விவகாரம் குறித்து நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதற்கு ஏற்ப செயல்படுவோம். சேலம் பல்கலைக்கழகத்தில் இதே போல் குற்றச்சாட்டு வந்தது எனவே, அவர்களை பணி நீக்கம் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்காக முதல்வர் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறினார்