வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ள சூழலில்
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக மிதமான மழைப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கடந்த மாதம் அக்டோபர் 1 ம் தேதியில் இருந்து இன்று வரை சென்னைக்கு வழக்கத்தை விட 15 சதவீதம் அதிகம் மழை பொழிந்துள்ளது.
இயல்பாக 731.9 மி.மீ மழை பொழிவு இருக்கும் நிலையில் தற்போது 840.8 மி.மீ மழை பொழிந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கமாக 767.5 மிமீ மழைப் பொழிவு இருக்கும் நிலையில் 855.9 மி.மீ மழைப் பொழிந்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழைப்பொழிவை விட 12 சதவீதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.