அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் புரட்சித்தாய் சின்னம்மா அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா
மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவர் அம்மா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் அதன் பின்னர் அதை திருத்தம் இருந்தால் அவர்களே செய்து அனுப்புவார்கள்
அதன் பின்பு இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும் அதை பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும்
ஆனால் இவர்கள் ஒரு முறை அனுப்பினார்களா அல்லது எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை, ஆகவே இது குறித்து உள்ளே சென்று கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரு மாநிலத்தை வைத்து மட்டும் சொல்லிட முடியாது அனைத்து மாநிலங்களும் சேர்ந்து எடுக்கும் முடிவில் அதிக பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் அதை செய்து கொள்ள முடியும் தனிப்பட்ட ஒருவர் இதை செய்ய முடியாது
ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்று அணுகுமுறை உள்ளது அதைப்போல தமிழக அளுநரை தமிழக அரசு நடத்த வேண்டும், ஒருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால் ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும்
ஆற அடி கரும்பு ஒருவரால் வளர்க்க முடியாது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பின்பு திமுக அரசு கரும்பு வழங்கியது இருந்த போதிலும் கரும்பு வாங்கியதில் திமுக அரசு தாமதம் காட்டி வருகிறது
புரட்சித்தலைவி அம்மா பொங்கல் தொகுப்பை வழங்குவதில் சொல்வதை மட்டுமே செய்வார்கள்
மக்களை ஒருபோதும் அதிமுக ஏமாற்றியது இல்லை ஆகவே வரும் காலங்களில் நன்றாக யோசித்து திமுக அரசு செயல்பட வேண்டும்
திமுகவை வீழ்த்த வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மாவிற்கு சமர்ப்பிப்போம்
இதன் ஒரே காரணமாக அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும்
அரசியல் விவகாரங்களில் திமுக மற்றும் அதைச் சார்ந்த குடும்பத்தினர் தலையிடுவது வாடிக்கையாகியுள்ளது
மேலும், இபிஎஸ் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த புரட்சித்தாய் சின்னம்மா இணைப்பு குறித்து ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறேன் விரைவில் பாருங்கள்
எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு தனக்கு என்ன பயம் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அனைவரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் விரைவில் உங்களுக்குத் தெரிந்தே நடக்கும் என்றார்.
ஜல்லிக்கட்டு வர காரணம் அதிமுக தான் அது அனைவருக்குமே தெரியும் அதே சமயம் முதலில் அவனியாபுரம் தான் ஜல்லிக்கட்டுக்கு பேர் போன இடம் என்று கூறுவார்கள் திமுக காரர்கள் ஒரு தவறு செய்தால் முன்னதாகவே அதை சரி செய்து வைத்துக் கொள்வார்கள்
மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து 200 300 காளைகளை பந்தயத்திற்கு விடவில்லை அவையெல்லாம் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லலாமா என்ற நிலைமை தற்பொழுது நடந்துள்ளது
வாகனங்களில் திமுகவின் படத்தை ஒட்டுக்கொண்டு எங்கள் வண்டி என்று மறைமுகமாக காட்டிக் கொள்கிறார்கள்
இதற்கு அறிவாலயம் என்று பெயரை போட்டுக்கொண்டு அவர்கள் ஜல்லிகட்டை நடத்திருக்கலாம்
வாகனங்களில் பம்பர் போடக்கூடாது என்று கூறிய பின்பு எங்கள் வாகனங்களில் கழட்டி விட்டோம் அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள மக்களும் கழட்டி விட்டார்கள் ஆனால் நகரத்தில் திமுக வண்டியில் உள்ள பம்பர்களை காவல்துறை எடுக்க முடியவில்லை காரணம் திமுகவினர் கொடிபறப்பதால் காவல்துறையினரால் கூற முடியாத நிலையில் இருக்கிறது
தற்போது நிதி அமைச்சர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார் அவருக்கு தமிழக நிதி நிலைமை தெரியும் திமுகவின் தேர்தல் அறிக்கை குழுவில் அவர் இருந்திருக்கிறார் அப்படி இருந்தும் எப்படி பொய்யான வாக்குறுதியை கொடுக்க முடிந்தது
திட்டங்கள் அறிவித்து பெயருக்காக துவக்க விழா வைத்துவிட்டு திட்டத்தைக் கிடப்பில் போடுகிறார்கள்
இல்லம் தேடி மருத்துவம் என்று கூறிவிட்டு பிபி மாதிரியும் சுகர் மாத்திரை மட்டும் கொடுக்கிறார்கள்
நிதிநிலை சரியில்லை பண பற்றாக்குறை என்று கூறும் திமுக ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கும் பொழுது அங்கேயே மருந்துகளை கொடுத்து விட்டால் தேவைப்படும் மக்கள் வாங்கிக் கொள்வார்கள் ஆனால் இது விளம்பரப்படுத்தும் திட்டம்
தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு மிகவும் நன்றாக உள்ளது ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுப்பி விட்டால் குக்கிராமங்களில் மக்கள் தங்கள் வியாதியை கூறி மாத்திரை வாங்கிக் கொள்வார்கள் இது ஆடம்பர செலவுதான் என்றார்.