நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அதற்காக சிகிச்சை பெற்று வரும் நான் அதில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தனது சமுக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.அதற்கு தமிழ் தெலுங்கு பிரபலங்கள் விரைவில் குணமடையவும் ஆறுதல் கூறி வந்தனர். மேலும் யாசதோ ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்ட பேட்டியிலும் அந்த நோய் குறித்து பேசுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்நிலையில் உடல் நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியா? அல்லது வேறு ஏதும் காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் முழுமையாக வெளியாக வில்லை.