27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesMemesPoliticalTamilnaduTweetsViral

மெரினாவில் கெத்து காட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் போலீசார் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்ய வந்த தமிழக தலைமை காவல் இயக்குனர் சைலேந்திரபாபு மக்களை சந்தித்தார்.

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அங்கு பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் குழந்தைகளின் கையில் பெற்றோரின் கைபேசி எண்ணை டேக் ஸ்டிக்கரை ஒட்டி, அதிக கூட்டம் இருக்கும் இடங்களில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி, குற்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட சந்தேகத்திற்கு உள்ள நபர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக பிடித்து விசாரிப்பது, போன்ற பாதுகாப்பு பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,

இந்த போலீசார் பாதுகாப்பு கண்காணிக்க கூடுதல் ஆணையர் மேற்கு இணை ஆணையர்கள் துணை ஆணையர்கள் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர்,

See also  வாரிசு படம் பார்க்க வந்த லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ?

இந்த பாதுகாப்பு பணியானது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவைகளை கண்காணிக்க அப்போது அதிகாரிகள் வந்து கண்காணித்து பணிகளைக் குறித்து ஆய்வு செய்ததாகவும், இன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்துள்ளதாக இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதே போல் அவர்களுக்கு பாதுகாப்பு குறித்து தானே விழிப்புணர்வை தொடர்ந்து அளித்து வருவதாகவும், இன்று இரவு 9:00 மணி வரை பொதுமக்களுக்கு கடற்கரையில் அனுமதி உள்ளதாக சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்,

மேலும் மெரினா கடற்கரை அருகே உள்ள காமராஜ் சாலையில் சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி ஏராளமான போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர் இதனால் போக்குவரத்து சீராக அமைந்துள்ளது,

See also  கடுமையான மூடுபனி - 4 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

மெரினா கடற்கரையில் கூடும் பொது மக்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய தமிழக தலைமை காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வருகை தந்து பொதுமக்களுடன் பாதுகாப்பு பணிகளை குறித்து விசாரித்தார்,

Related posts