26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CelebritiesTamilnadu

காசிக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே இருந்த தொடர்பை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு !

Rn Ravi

சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் பவன்ஸ் கலாச்சார விழா 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், திரைப்பட பின்னணி பாடகர் வாணி ஜெயராம், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செய்ததுக்காக பவன்ஸ் லெஜெண்டரி விருதையும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் ஆளுநர் வழங்கினார்.

அதை தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர்,

பாடகி வாணி ஜெயராம் பவன்ஸ் விருது பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும்,1930 களில் ஆங்கிலேய ஆட்சியால் இந்தியா பாதிக்கப்பட்டதை இந்திய தலைவர்கள் உணர்ந்தார்கள்.
அரசியல், பொருளாதார கலாச்சார மற்றும் ஆன்மீக ரீதியில் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவை சிதைத்தது என குற்றம் சாட்டினார்.

See also  ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டம் காலாவதி ஆனது

இந்திய வளங்களை விரைவாக கண்டு செல்லும் நோக்கோடு ஆங்கிலேய ஆட்சி அப்போது செயல்பட்டதாகவும்
அது மட்டுமல்லாமல் இந்தியர்களிடம் இருந்த கலாச்சார, ஆன்மிக ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாக ஆளுநர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே இருந்த உறவை ஆங்கிலேயர்கள் சிதைத்ததாகவும் அவர் விமர்சித்தார்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் காசி மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணம் செய்தனர் ஆனால், அதை ஆங்கிலேயர்கள் தடுத்ததாகவும்
இந்தியர்கள் நாம் ஆன்மீக ரீதியில் ஒற்றுமையாக இருந்தோம் ஆனால், நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் ஒடுக்க நினைத்ததாக குற்றம்சாட்டினார்.

தமிழகம் தான் ஆன்மீகத்தின் ஊற்று, இங்கிருந்து தான் பல ஆன்மீக பெரியவர்கள் இந்தியா முழுவதும் ஆன்மிகத்தை எடுத்து சென்றதாக கூறிய ஆளுநர்,

காசி தமிழ் சங்கம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அதில் பங்கேற்க தங்களை பதிவு செய்து வருவதாக கூறினார்.

See also  வந்தாச்சு புதிய காற்றழுத்த தாழ்வு மையம் - வெளுத்து வாங்கப் போகும் மழை...

பின்னர், பேசிய பாரதிய வித்யா பவன் நிர்வாகி,

அரங்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி அதிகரித்துள்ளன ,சொத்து வரியும் மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளது என ஆளுநர் முன்னிலையில் தெரிவித்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Related posts