இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், எம்.எஸ்.தோனி, ஓபிஎஸ், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய தமிழக ஆளுநர் ரவி அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசத் தொடங்கினார்.
இந்தியாவைப் போலவே, இந்தியா சிமெண்ட்ஸும் 75 வருடங்கள் கொண்டாடுகிறது.
ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் கற்களை ஏற்றி கொண்டு சென்றவர்கள், சிமெண்ட் துறையில் இன்று வெற்றிநடைபோடுகின்றனர்.
நம்முடைய உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
1840இல் ஷெர்ஃபீல்ட் என்ற நிறுவனத்தின் இரும்புகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டபோது ஒரு கிலோ கூட விற்கவில்லை. ஏன் மற்ற நாடுகளின் இரும்புகள் இந்தியாவில் விற்கவில்லை எனக் கேட்டபோது, அப்போதைய மெட்ராஸ் கவர்னர் இங்கு தரமான இரும்புகள் சிறு சிறு கடைகளில் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்
எனவே, பிரிட்டிஷ்காரர்கள் இங்கு வந்து தரமான இரும்பு செய்ய கற்றுக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் இந்திய இரும்பு துறையையே அழித்தனர் இதுதான் வரலாறு.