27.7 C
Tamil Nadu
28 May, 2023
NewsPoliticalTamilnadu

சீர்காழி : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

cm-mk-stalin-in-table

சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க படுமென அறிவித்துள்ளார்.. இன்று (14.11.2022) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

See also  அங்கீகாரம் இன்றி செயல்படும் விளையாட்டு பள்ளிகள் - கல்வி அலுவலர் எச்சரிக்கை

Related posts