26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
PoliticalPuducherrySrilankaTamilnaduViral

மீண்டும் சூடு பிடித்த ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை

ராமஜெயம் சி.பி.சி.ஐ டி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடத்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை என்ற கிராமத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு முப்புதரில் வீசப்பட்டார் இந்த வழக்கை 10 ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள், ராமஜெயம் கொலையின்போது திருச்சியில் தங்கி இருந்த ரவுடிகள் பட்டியலை தயாரித்தனர். இதில் இந்த வழக்கில் 12 பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டனர்.

See also  கொளத்தூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை - உயிரிழந்த கால்பந்து வீராங்கனை...

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய் குழு திருச்சி நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றது. இதையடுத்து காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள தடைய அறிவியல் பரிசோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை 18, 19 ஆகிய தேதிகளில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்திய ராஜ்ஆகியோரும் 19,20 தேதிகளில் சாமி ரவி, மாரிமுத்து, ராஜ்குமார், சிவா நான்கு பேருக்கும் 20,21 ம்தேதி லெஃப்ட் செந்தில், கலைவாணன், சுரேந்தர், திலீப் ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

அதற்கு முன்னதாக அவர்களிடம் சிறிய மருத்துவ சோதனை மற்றும் விசாரணை செய்த பிறகு உண்மை கண்டறியும் சோதனை துவங்குவார்கள் என தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
சோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

See also  10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு முடிவு எப்போது என தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் !

Related posts