27.7 C
Tamil Nadu
28 May, 2023
IndiaNewsTamilnaduWeather

வருகிற 21,22 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலாட் – நடக்க போவது என்ன ?

வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொள்ள இருக்கிறது.

அதன்பிறகு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாடு,புதுச்சேரி,தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதி நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நவம்பர் 19,20 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்கள்,காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்

நவம்பர் 21,22 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்கள்,காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் மிககனமழையும் பெய்யும். நவம்பர் 21,22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

See also  ஓடிடியில் வெளியாகும் தி லெஜண்ட் திரைப்படம்!!

நவம்பர் 23ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்கள்,காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்க விடுத்துள்ளது..

Related posts