27.7 C
Tamil Nadu
28 May, 2023
EducationIndiaPoliticalPuducherryScienceTamilnadu

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள் !

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாநில கல்விக் கொள்கை உயர்மட்ட குழுவின் தனியார் பள்ளி நிர்வாகிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி டி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்கம், தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் பல்வேறு தனியார் பள்ளிகள் அமைப்பை சேர்ந்தவர்களிடம் இந்த கருத்து கேட்பு கூட்டமானது நடைபெற்றது.

ஒவ்வொரு சங்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகளும் தங்களுடைய கருத்துகளையும் கோரிக்கைகளையும் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் முன்பு வைத்தனர். மேலும் பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகிகள் மும்மொழிகொள்கையை ஆதரிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன், மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் பரிந்துரைக்காக மாண்புமிகு நீதியரசர் முருகேசன் தலைமையில் இன்று மாநிலக் கல்விக் கொள்கை குறித்து கருத்து கூட்டம் நடைபெற்றது. அனைத்து சங்கத்தினரும் தங்களுடைய கருத்துக்களை கடிதம் வாயிலாக நீதி அரசரிடம் அளித்திருக்கிறோம்.

மும்மொழிக் கொள்கை கட்டாயம் தேவைப்படுகிறது எனவும் என் சி எப் 2022 இன் படி அரசு பள்ளிகளில் இருந்தது போல அச்சு கைத்தறி தையல் போன்ற கைத்தொழில் திறன்களை புதிய கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் இன்னும் பல கோரிக்கைகளை தனியார் பள்ளிகளை சேர்ந்த சங்கங்கள் நீதியரசர் முருகேசன் முன்வைத்ததுள்ளதாக கூறினார்.

தற்போதைய சூழலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளிகளில் பயில்கிறார்கள். தனியார் பள்ளிகளில் உள்ள சென்சிட்டிவ் ஏரியாவை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளோம். சரியான நேரத்தில் நீதியரசர் அவர்கள் இந்த கருத்து கேட்ப கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் இதை வரவேற்கிறோம் நல்ல எதிர்பார்போடு இருப்பதாக தெரிவித்தார்.

See also  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நெஞ்சை உருக்கும் சம்பவம்

இதனைத் தொடர்ந்து பேசிய தனியார் பள்ளி கூட்டமைப்பு செயலாளர் நந்த குமார், அரசின் கொள்கைக்கோ அரசுக்கு எதிராகவோ தாங்கள் செயல்படவில்லை. அகில இந்திய அளவிலே அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கப்பட வேண்டும். பள்ளிப்படிப்போடு மாணவர்கள் உயர்கல்வி மேல்நிலைக் கல்விகளை மேற்கொள்ளப்படும் போது எந்த தடையும் இல்லாமல் அறிவியலும் கணிதமும் ஒரே மாதிரி இந்தியா முழுவதும் இருந்தால் நன்றாக இருக்கும். மும்மொழிக் கொள்கை திட்டம் தேவை.

அரசுப் பள்ளிகளிலும் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும், ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளோம். தனியார் பள்ளிகளில் உள்ளது போல் அனைத்து வசதிகளும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் அப்போதுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

அரசு பள்ளி தனியார் பள்ளி என இரு பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும் சூழல் உருவாகும். அதேபோல நியாயமான கல்வி கட்டணம் வழங்க வேண்டும், உடனடி அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்திக்கும் சிக்கல்களையும் நீதி அரசரின் முன்பு கோரிக்கையாக வைத்திருக்கிறோம். அவரும் அதை ஏற்றுக் கொண்டு அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கூறியிருப்பதாக தெரிவித்தார்.

வரக்கூடிய ஆண்டுகளில் மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவை என்கிற போது அதற்கு ஏற்றார் போல் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களின் பாடத்திட்டத்தை போல் தரமான பாடத்திட்டத்தை எங்களுக்கு தர வேண்டும்.

மாநிலக் கல்விக் கொள்கை திட்டத்தில் மாணவர்களின் ஒழுக்கமும் நலமும் கலாச்சாரமும் மிக முக்கியம். அதற்கேற்றார் போல் கல்வி திட்டத்தை வடிவமைக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்விக் கொள்கை என்னும்போது தமிழ்நாட்டில் மட்டும் தனியான ஒரு கல்விக் கொள்கை என்பது ஏற்க முடியாது ஒன்று நடைமுறைக்கு சாத்தியமற்றது என கூறினார்.

See also  நெருங்கும் மண்டல பூஜை - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

எங்களைப் பொறுத்தவரை தேசிய கல்விக் கொள்கை மிக சிறப்பாக உள்ளது . அதை மாற்றி அமைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை முன் வைத்தனர்.

ஆல்பாஸ் என்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுடைய தனித்திறனை அறிந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவது தான் சரியாக இருக்கும் எனவே ஆல்பாஸ் என்பது ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வதுதான். இப்படி இருந்தால் வருங்காலத்தில் மாணவன் சுத்தமாக படிக்க இயலாது. குறைந்த பட்சமாக அடிப்படை தேர்வுகளை நடத்த வேண்டும் என விரும்புகிறோம்.

எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அரசின் முடிவு எனவும் இல்லையென்றால் அனைத்து மாணவர்களும் சிபிஎஸ்சி க்கு மாறுவார்கள் என கூறினார்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்க தலைவர் ஸ்ரீதர் பேட்டி : இன்று தமிழக அரசின் உடைய புதிய கல்விக் கொள்கை அனைத்து சங்கங்களின் சார்பாக தனியார் பள்ளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வேண்டுமென்று கூறி இருக்கிறோம். அதேபோல பாடத்திட்டத்தை வடிவமைக்கும் போது அறம் சார்ந்த பாட திட்டம் வேண்டும். தமிழ்நாடு கல்வி என்பது அரசாங்க பாடத்திட்டத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அதேபோல சுதந்திரமாக தனியார் பள்ளிகள் என்று ஏற்படும் வகையில் இருக்க வேண்டும் என கூறினார்.

மும்மொழி கொள்கை தேவை என்று சொல்கிறோம் ஆங்கில வழிக் கல்வி அவசியமாக இருக்கிறது. மூன்றாம் மொழியை மாணவர்கள் கற்க வேண்டியது அவசியமாக உள்ளது. மூன்றாவது மொழியாக எந்த மாநிலத்தின் மொழி இருந்தாலும் அதை கற்றுக் கொடுக்கும் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறினார்.

Related posts