தமிழக சிறைகளில் சமீபகாலமாக சிறைக் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது இதனை தடுக்கும் வகையில்
சிறை துறையில் ரோந்து காவலுக்கு செல்லும் காவலர்கள் பாடி ஒன் கேமராவை பயன்பாட்டிற்கு அறிமுகப் படுத்தியுள்ளனர். குறிப்பாக தமிழக காவல்துறை சார்பில் ரோந்து காவலர்கள் மட்டும் பாடி ஒன் கேமரா பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது சிறைச்சாலைகளில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கவும் குற்றச் செயல்களை கண்காணிக்கவும் சிறைத் துறையில் பாடிஓன் கேமராவை அறிமுகம் படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் 46 லட்ச ரூபாய் செலவில் 50 பாடி ஒன் கேமராக்களை சிறை வாங்கியுள்ளனர். இந்த பாடி ஒன் கேமராக்கள் மூலமாக பதியப்படும் காட்சிகள் செயற்கை கட்டுப்பாட்டு அறை மற்றும் சிறைத்துறை தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் பதிவு செய்யப்படும்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்பது மத்திய சிறை சாலைகளிலும் பாடி ஒன் கேமரா ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தப்படும் எனவும் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தகவல் தெரிவித்துள்ளார்.