பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாயின் மறைவு செய்தியை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் உடனடியாக குஜராத் புறப்பட்டு சென்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத் காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் தயாருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு இறுதி சடங்கிற்காக உடலை சுமந்து சென்றார்.
இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் மோடியின் தாயாருக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே பிரதமரின் தாயார் ஹீராபென்னுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக தமிழ்நாடிலிருந்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தனித்தனி விமானம் மூலம் குஜராத் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.