26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
TamilnaduVehicle

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் – முன்பதிவு மும்முரம் !

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடபட உள்ளது . சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17 ஆம் தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள், ரெயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர்

சென்னையில் இருந்து செல்லக்கூடிய வழக்கமாக ரயில்கள் மட்டுமின்றி சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு நிரம்பி விட்டன.
இந்நிலையில் பொங்கலையொட்டி வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து 12 ஆம்தேதி முதல் 14 ஆம்தேதி வரை 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து 6,182 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

See also  பர்தா அணிந்து நடனமாடிய கல்லூரி மாணவர்கள் - சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

மக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவில் புறப்பட்டு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளும் அனைத்தும் நிரம்பிவிட்டன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி ஆகிய தென் மாவட்டப் பகுதிகளுக்கும், தேனி, திண்டுக்கல், கும்பகோ ணம், தஞ்சாவூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் பெரும்பாலும் இருக்கைகள் நிரம்பி விட்டன.

See also  சினிமாவில் இனிமேல் நடிக்க போவதில்லை - உதயநிதி !

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் பேர் வீதம் முன்பதிவு செயது வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னையில் இருந்து இரவில் இயக்கக் கூடிய 300 விரைவு பேருந்துகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. பகல் நேர பேருந்துகளில் ஒரு சில இருக்கைகள் மீதமிருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துறை தகவல்

Related posts