திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்திய கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி,
பட்டமளிப்பு விழா மேடையில் பேசிய மோடி கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின்சக்தி பயன்பாடு 24% அதிகரித்துள்ளது என்றும்
சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்து விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர் என தெரிவித்தார்.
மேலும்,தேச ஒற்றுமையில், இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
இளைஞர்கள் கேள்வியை மட்டும் எழுப்புவதில்லை, பதிலையும் பெற்றுவிடுகிறார்கள்.
பட்டம் பெறும் மாணவிகள் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
நீண்ட காலமாக காதி புறக்கணிக்கப்பட்டது, தற்போது காதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.