சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பொருளியல் மையத்தில் முன்னாள் RBI ஆளுநர் C.ரங்கராஜன் எழுதிய ” Forks in the road ” என்ற புத்தகத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம்,
நாட்டின் பொருளாதார நிலை இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கும் போது அதனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் RBI ஆளுநர் ரங்கராஜன் ஆகியோர் அதனை மீட்டெடுத்தனர் என பேசிய அவர்,
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் RBI மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது,
நாட்டின் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிலை இருந்த போது அதனை செயல்படுத்தினோம் என கூறினார்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் அவர்களின் பதவி காலம் முடியும் வரை பதவியில் இருந்தனர் என்றும்
ஆனால்,தற்போது ஆளுநர்களுக்கு ஏற்படும் அழுத்தம் காரணமாக அவர்கள் பதவி விலகும் நிலை உள்ளது. என்றும் இந்தியாவில் ஒரு தரப்பு மக்கள் இன்னும் ஏழ்மை நிலையில் தான் உள்ளனர் எனவும்
எந்த அரசாக இருந்தாலும் நாட்டில் ஏழ்மை இல்லாத நிலை உருவாக்க வேண்டும் சீனாவின் ஒப்பிடும் போது இந்தியாவில் ஏழ்மை அதிக அளவில் உள்ளதாகவும், உணவு,கல்வி, மருத்துவம் போன்றவற்றில் எந்தவிதமான சமரசமும் இன்றி அனைவருக்கும் கிடைக்க பெற வேண்டும் அதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என ரங்கராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி உச்சநிலை இருந்தது தற்போது நாட்டின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை அதிகாரிகள் எளிதில் அணுக முடியாத நிலை உள்ளதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.