உலகின் பிரபல நகரங்களான டோக்கியோ, துபாய்,நியூயார்க், லண்டன்,உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மெட்ரோ ரயில்,பேருந்து, படகு, டிராம் , உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளையும் மக்கள் பயன்படுத்துவதை எளிமையாக்குவதற்காக ஒரே டிக்கெட் என்கிற சேவை நடைமுறையில் உள்ளது.
இந்த வசதியை சென்னையில் கொண்டு வர வேண்டும் என சென்னை மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் மூலம் மெட்ரோ மின்சார ரயில் பேருந்து என பல போக்குவரத்துகளுக்கு தனியான டிக்கெட் எடுக்க தேவையில்லை. இதனால் , பயணம் எளிதாகும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில்
ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
அதன்படி, இந்த கூட்டமானது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் காலை 11:30மணிக்கு நடைபெறுகின்றது.
இந்தக் கூட்டத்தில் ஒரே பயணச்சீட்டு முறை அமல்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே பயணச்சீட்டு முறை மட்டும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டால் அது சென்னை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.