27.7 C
Tamil Nadu
28 May, 2023
PuducherryTamilnaduVehicleViral

புயல் கரையைக் கடந்தாலும் இன்றிரவு 800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்

மாண்டஸ் புயல் ஆனது இன்று மகாபலி புர கடற்கரையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக தெரிவித்த தகவலின் படி இன்று சென்னையிலிருந்து தமிழக முழுவதும் 800 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,

புயல் எச்சரிக்கை காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் மட்டும் பயணிக்கும் பேருந்துகள் இன்று இரவு வேறு சாலையை தேர்ந்தெடுத்து பயணிக்க அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

நேற்று சென்னை மாநகராட்சி பேருந்துகள் புயல் எச்சரிக்கை காரணமாக இயக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

See also  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய வில்லியம்சன்

மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts