அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி 1ல் காலியாக உள்ள 1895 பணியிடங்களை கௌரவ விரிவுரையாளர்களக் கொண்டு பூர்த்தி செய்ய உயர் கல்வித் துறை உத்தரவு
2022-23ஆம் கல்வியாண்டில் 11 மாத அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்
கௌரவ விரிவுரையாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியீடு செய்ய பட்டுள்ளது
அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7198 பேராசிரியர் பணியிடங்களில் 5303 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருவதால், மீதமுள்ள 1895 காலி பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி நியமிக்கப்பட உள்ளனர்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணி அறிவிப்பை சம்பந்தப்பட்ட மண்டல கல்லூரி கல்வி இயக்குனர்கள் அறிவிக்க வேண்டும்
பல்கலைக்கழக மானிய குழுவின் ஒழுங்குமுறை 2018ன் படி புதிய கல்வித் தகுதி பெற்றவர்கள் மட்டுமே கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற முடியும்
ஒரே மதிப்பெண் பெற்ற பணி நாடுனர்கள் கல்லூரியில் இருந்து 25 கிலோமீட்டர்க்குள் இருப்பவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும்.
www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்