நேபாளம் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்ற ஏர்லைன்ஸ் விமானம் தரையிரங்கும் பொழுது தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
காத்மாண்டு பகுதியில் இருந்து பொக்காரா சென்ற விமானம் ஓடு பாதையில் இருந்து விலகிய நிலையில் தீப்பிடிக்கத் தொடங்கியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் , இடிமான பகுதிகளில் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் உள் இருப்பவர்களை மீட்பதற்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்து வந்தனர்.
இதனிடையே உயிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து வந்த நிலையில், முதலில் 16 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. ஆனால் மீட்பு பணிகளின் நேரம் நீடித்துக் கொண்டே போக உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. மேலும் விமானத்தில் இருந்து மீட்போர்களை பாதுகாக்கும் பொருட்டு ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகளின் நேரம் அதிகரித்து கொண்டே போனதால் மீதமுள்ள அனைத்து பயணிகளும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தற்போது 64 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் , அவர்களுக்கான துக்கம் கடைப்பிடிக்க ஒரு நாள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் நேபாளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.