சென்னை 46-வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த மூன்றாண்டுகளாக கொரானா காரணமாக புத்தக கண்காட்சி நடைபெறாமல் இருந்தது அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு கொரானா கட்டுப்பாடுகளுடன் கூடிய சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
இந்நிலையில் வருகிற 2023 ஆம் ஆண்டின் சென்னை 46_வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மேலும் சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
அதனைதொடந்து சென்னை புத்தகக் கண்காட்சியில் 800 அரங்குகளும் மேலும் திருநங்கைகளைக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த புத்தகக் கண்காட்சியானது காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் பல கலைநிகழ்ச்சிளும் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.