தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய
அமைச்சர் உதயநிதி,
கொடுக்கப்பட்ட பொறுப்பு சரியாக செய்வேன், அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. விளையாட்டிற்கான தலைநகராக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.
இளைஞர் அணி செயலாளாரக ஆனபோதும் Mla வாக ஆன போதும் பல விமர்சனங்கள் வந்தது.
என்னுடைய செயலின்மூலமாக தான் நான் பதில் சொல்ல முடியும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம் அதை நோக்கி என் பணி இருக்கும்.
வாரிசு அரசியல் கூறுவதை தவிர்க்க முடியாது என் செயல் மூலமாக நிருபிக்க முடியும்.
என் மீது குறை இருந்தாலும் கூறுங்கள் அதை நான் சரி செய்து கொள்கிறேன்.
நடிகர் கமலஹாசன் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரின் தயாரிப்பில் நடிக்க இருந்த திரைப்படத்தில் தற்போது நான் நடிக்க வில்லை, மாமன்னன் தான் கடைசி படம் என தெரிவித்தார்.