சிங்காரச் சென்னை 2.o திட்டத்தின் கீழ் ரூபாய் 1.14 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடைபாதை விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்டின் பின்புறம் 263 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் கடற்கரை மணலை கடந்து அலைகளை அடையும் வண்ணம் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஒன்பதாம் தேதி இரவு வீசிய மாண்டஸ் புயலின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகள் நடைபாதையானது முன்பகுதி மட்டும் சேதமடைந்தது அதனுடன் நடைபாதை முழுவதும் கடுமையான காற்றின் காரணமாக மணல் பரவியது.
அதன் காரணமாக தற்போது மாற்றுத்திறனாளிகள் நடைபாதை மீண்டும் சீர் செய்யும் பணியானது மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இதற்காக இங்கு தற்போது 35 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அதனுடன் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளின் நடைபாதை முன் பகுதியானது மாற்றி அமைக்கப்பட்டு மொத்த நீளமான 263 மீட்டரில் 10 மீட்டர் தூரம் அலைகளால் சேதமடையாத வண்ணம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சீரமைப்பு பணிகள் முடிந்து இன்னும் ஓரிரு தினங்களில் மீண்டும் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை பயன்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.