மதுரையிலுள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைகள், நீர் நிலைகள், அரிய பறவை இனங்களை காப்பாற்ற, பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி எனும் சிறிய கிராமம். இங்கு ஏழு பாறை மலைகள், குடைவரை கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த மலைகளை சுற்றி வற்றாத நீரூற்றுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகளும், மீன் இனங்களும், பூச்சி இனங்களும், 300 க்கும் மேற்பட்ட அரிய பறவை மற்றும் விலங்கினங்களும் வாழ்ந்துள்ளன. இதில் பல அரிய உயிரினங்கள் காலப்போக்கில், சமூக விரோதிகளின் பல்வேறு நடவடிக்கைகளால் அழிந்து விட்டன.
எனவே, பல்லுயிர்களின் பாதுகாக்க அரசாணை வெளியிடவேண்டும் என பூவுலகில் நண்பர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில்,அரசு அளித்த பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் அரிட்டாபட்டியை பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவித்துள்ளது.