டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.இந்த நிலையில் இந்திய அணியை பொறுத்தவரை ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன், இஷாந்த் ஷர்மா போன்றவர்கள் டெஸ்ட் முத்திரை குத்தப்பட்டு அவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி வந்தது இந்திய அணி.
அந்த வரிசையில் வந்தவர்தான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கருண் நாயர்.31 வயதாகும் கருண் நாயர் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்,டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கும்,உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்கும் விளையாடி உள்ளார்.
அவருடைய அபாரமான தடுப்பட்டத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் முதன் முதலில் இந்திய ஒருநாள் போட்டி அணியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2016ம் ஆண்டு ஜூன் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுக படுத்தியது.
அதன் பிறகு அதே ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன கருண் நாயர் அறிமுகம் ஆன மூன்றாவது போட்டிகளிலே சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முச்சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முன்னாள் வீரர் சேவாக்கிற்கு பிறகு முச்சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றவர்.முச்சதம் விளாசிய கருண் நாயருக்கு அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டிகளில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அதன் பிறகு நடைபெற்ற ரஞ்சி ட்ராபி போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் தேர்வு குழு மறுத்து வந்தது.
இருந்தாலும் இந்திய ஏ அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார்.அதன் பிறகு மீண்டும் 2018 ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்த அவருக்கு 5 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அப்போது இந்திய அணியின் பேட்டிங் படும் சொதப்பலாக இருந்தது.இருந்த போதிலும் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதற்கு சரியான விளக்கம் அளிக்காத தேர்வு குழு அடுத்தடுத்து நடைபெற்ற தொடர்களில் கருண் நாயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊடகத்தினர் அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு என்னை யாரும் தொடர்பு கொள்ள வில்லை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என கருண் நாயர் பதில் அளிக்க அதனை மறுத்த தேர்வு குழு கருண் நாயர் தேர்வு செய்யப்படத்தது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டது என கூறியது.
இந்த நிலையில் தற்போது உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார் கருண். இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்,சூர்யகுமார் யாதவ்,கே.எஸ்.பரத் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இதனால் எதிர் காலத்தில் அவருடைய இடம் இந்திய அணியில் கேள்வி குறியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதுவரை 6 டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அவர் ஒரு முச்சத்துடன் 374 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்
Dear cricket, give me one more chance.அன்புள்ள கிரிக்கெட், எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
என்ற உருக்கமான பதிவை தனது சமுகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.