27.5 C
Tamil Nadu
28 May, 2023
NewsPoliticalTamilnadu

தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு தினசரி ரயில் – கோரிக்கை வைத்த கனிமொழி…

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை தெற்கு இரயில்வே பொது மேலாளரிடம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள தெற்கு இரயில்வே தலைமையகத்தில் அதன் பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை தூத்துக்குடியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

அதில்,தூத்துக்குடியில் இருந்து தினசரி கோவைக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்றும் மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் ‘லோக்மானியா இரயிலை’ தூத்துக்குடியில் இருந்து இயக்குமாறும் திருநெல்வேலி – பாலக்காடு இடையே இயங்கும் ‘பாலருவி எக்ஸ்பிரஸ்’ இரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

3 நடைமேடைகளுடன் இருக்கும் தூத்துக்குடி இரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர்,தெற்கு இரயில்வே பொது மேலாளரிடம் வழங்கினர்.

See also  அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல் நடத்தி விட்டு வேட்பாளரை கடத்தி சென்ற மர்ம நபர்கள்!

இது குறித்து பரீசிலித்து உரிய நடவடிக்க எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உறுதியளித்துள்ளதாக, கனிமொழியுடன் உடன் வந்திருந்த தூத்துக்குடி மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related posts