2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன மக்களுக்கு மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது.கட்சியின் மாவட்ட செயலாளர்கள்மாநில நிர்வாகிகளோடு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
85 மாவட்ட செயலாளர்கள்,மாநில நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்க இருக்கிறார்.
மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு 4 ஆண்டு முடிந்துள்ள நிலையில் இதுவரை இரண்டு பொது தேர்தல்களை சந்தித்துள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்காத நிலையில் வர உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகங்கள் வகுப்பது குறித்து கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது ,கடந்த தேர்தலில் செய்த தவறை இந்த தேர்தலில் செய்யக்கூடாது எனவும் கட்சியின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் ,தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து ஆலோசனை செய்வோம் எனவும் நிர்வாகிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது…