அடுத்த கல்வியாண்டிற்கான JEE நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பு NTA கடந்த வாரம் வெளியிட்டது….
அதன்படி ஜனவரி மாத இறுதியில் நுழைவு தேர்வு நடைபெற உள்ளது…
தற்போது விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில் அதில் 10,+2வகுப்பு மதிப்பெண்கள் கேட்கப்பட்டுள்ளது..
ஆனால் தற்போது பிளஸ் டூ படித்து வரும் மாணவர்கள் 2020ல் பத்தாம் வகுப்பு படித்தபோது கொரோனா தொற்றால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது அவர்களுக்கு மதிப்பெண் ஏதும் வழங்கப்படவில்லை..
அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என மட்டும் குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது…
ஆனால் விண்ணப்ப படிவத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும் கேட்கப்படுகிறது…
இதனால் தமிழ்நாட்டில் மாநில வழி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது…
இந்த நுழைவுத் தேர்வு ஜனவரி 24 இல் இருந்து 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது….
நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரியில் நிறைவடைகிறது
ஆண்டுதோறும் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயலும் மாணவர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இந்த நுழைவுத் தேர்வை எழுதி வருகின்றனர்…
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
jeemain.nta.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும் …