இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிவந்துள்ள தகவலில் விமான நிலையங்களில் விமானத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் நிலையில், பொழுதுபோக்கிற்காக ஏதாவது இருந்திருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்பது பல பயணிகளின் சிந்தனையாக இருந்திருக்கக் கூடும்.
தற்போது இது போன்ற சிந்தனைகள் செயல்பாட்டுக்கும் வந்துள்ளது, அதில் முதற்கட்டமாக சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்திருக்கும் விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக சுமார் ரூ.250 கோடி செலவில் மல்டிலெவெல் கார் பார்க்கிங், திரையரங்கம் , ஹோட்டல்கள் , ஷாப்பிங் மால்கள் போன்றவைகளுக்கான கட்டிடப்பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது அதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் மிகவும் பிரபலமான பிவிஆர் சினிமாஸ் 5 திரைகள் கொண்ட திரையரங்கை நேற்று திறந்து வைத்துள்ளது. இத்திரையரங்கில் சுமார் 1,150 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இணைப்பு விமானத்திற்காக பயணிகள் அதிக நேரம் காத்திருப்பதால் அவர்களின் பொழுதுபோக்கிற்காக நிச்சயம் பிவிஆர் சினிமாஸ் பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விமான நிலையத்திற்கு பயணிகளை வழி அனுப்ப வருவோருக்கும் நேரம் செலவிட பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் விமான பயணிகளின் பொழுதுபோக்கிற்காக இந்தியாவிலேயே திறக்கப்பட்ட முதல் திரையரங்கமாக இவை அமைந்துள்ளது.அதுவும் சென்னையில் விமான நிலையத்தில் திறக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்று வருகிறது, புதிதாக திறக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கை திறந்து வைப்பதற்காக நடிகர் சதீஷ், ஆனந்த் ராஜ் மற்றும் கூல் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
previous post