இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ இன்று ஆந்திர மாநிலம் ஶ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
ஓராண்டுக்கும் மேலாக ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஸ்கைரூட் ஈடுபட்டு வந்தது. வெவ்வேறு எடைகளைச் சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா மற்றும் பாஸூம்க் ஆர்மீனியா ஆகிய மூன்று பேலோடுகளை சுமந்து சென்றது.
2.5 கிலோ எடையுள்ள சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான Spacekidz உருவாக்கியுள்ள ‘Fun-Sat’ செயற்கைக்கோளும் இதில் ஒன்று.
இந்தியாவின் முதல் கார்பன்-ஃபைபர்-கட்டமைக்கப்பட்ட திட எரிபொருள் எஞ்சின் மூலம் இயக்கப்படும் விக்ரம்-எஸ், முதலில் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டது, மோசமான வானிலை காரணமாக மாற்றி அமைக்கப்பட்டு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
விக்ரம் எஸ் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்களும் சேர்த்து அனுப்பப்பட்டன.
அவை புவி மேற்பரப்பிலிருந்து 89.5 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பல்வேறு தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்களை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்திய பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மத்திய இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் மற்றும் இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் , ஸ்கை ரூட் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா, நாகா பரத் டாக்கா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அப்போது, பேசிய மத்திய அமைச்சர்
இன்று இது ஒரு புது தொடக்கம் இது இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றார். மேலும்,
ககன்யான் விண்கலம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்த அவர், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியபோது,
இந்த விக்ரம் ராக்கெட் வரும் காலங்களில் அதிகப்படியான விண்கலங்களை சுமந்து செல்ல உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த புது முயற்சிகளை எடுக்க உள்ளிட்டவர்களுக்கு தான் இது போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
புதுமையும், பாரம்பரியமும் சேர்ந்து வேகத்துடன் செயல்படுவதை வரவேற்கிறோம். அதிகப்படியான திறமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. தொடர்ந்து 4 முதல் 6 வாரங்களுக்குள் அக்னி கோன், குளோபல் ஸ்பேஸ் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் இங்கு செயல்படுத்தப்பட உள்ளன என்றார்.
தொடர்ந்து, ஸ்கை ரூட் இணை நிறுவனர் பவன் குமார் சந்த் பேசும் போது,
மிக பெருமையாக உள்ளது. இந்தியா அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டு உள்ளது.2 ஆண்டுகளுக்கு முன் தான் இந்த செயல் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு இஸ்ரோ பெரிதும் உதவியாக இருந்தது
பலரும் சொன்னார்கள் தனியார் ராக்கெட்டை ஏவுவது முடியாது என்று ஆனால் இன்று சாதித்து காட்டி இருக்கிறோம். முதல் நாளில் இருந்து இஸ்ரோவும் சோம்நாத்தும் பெரிதும் உதவி புரிந்தனர் என்றார்.
மேலும், அடுத்த ஆண்டு விக்ரம் 1 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.