தமிழகத்தில், தென் மாவட்டங்களில் முதல் முறையாக மதுரை மத்திய சிறையில் இன்டர்காம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான சிறைச்சாலையாக விளங்கக்கூடியது மதுரை மத்திய சிறைச்சாலை.
இங்கு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1800க்கும் மேற்பட்ட கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் கைதிகள் உறவினர்களை சந்தித்து பேசும் வகையில் இன்டர்காம் வசதி செய்து தரப்பட வேண்டுமென தொடர்ந்து பொதுமக்களும், கைதிகளும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
தொடர் கோரிக்கைகளில் எதிரொலியாக மதுரை மத்திய சிறைத்துறை நிர்வாகம் சார்பாக மதுரை சிறைத்துறை வளாகத்திற்குள் இன்டர்காம் வசதி முதல் முறையாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 17 அலைபேசிகள் வைக்கப்பட்டுள்ளன.
கைதிகளும் உறவினர்களும் நேரடியாக பார்த்து பேசும் வகையில் கண்ணாடி தடுப்புகள் மூலம் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தென் மாவட்டங்களில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை சிறைச்சாலை துணைத் தலைவர் பழனி அவர்கள் திறந்து வைத்தார்
இந்த நிகழ்வின்போது மதுரை மத்திய சிறையில் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.