26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CrimeTamilnaduViral

முதலமைச்சர் ஸ்டாலின் போட்டோவை காட்டி பல்லாயிரம் கோடி ஆட்டையை போட்ட ஹிஜாவு நிறுவனத்தின் மோசடி குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

நிதி மோசடி என்றாலே முழுக்க கரைத்துக் குடித்து மக்களுக்கு விளக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட படம் தான் சதுரங்க வேட்டை. ஆனால், அந்தப் படத்தையே மிஞ்சும் அளவிற்கு புதிய ஒரு வகையிலான நிதி மோசடியை செய்து இருக்கிறது ஹிஜாவு நிறுவனம்.

இந்த ஹிஜாவு நிறுவனத்தை நிறுவிய தலைமை அதிகாரிகளான அலெக்சாண்டர் மற்றும் சௌந்தரராஜன் மக்களை ஏமாற்ற புதிய ஒரு யுத்தியை கையாண்டுள்ளனர். அதுதான் முதலீடு செய்யும் பணத்திற்கு 15 சதவீதம் டிவிடெண்ட் என்கிற புதிய யுக்தி

அதாவது குறிப்பாக  முதலீடு செய்யும் ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய்க்கும்  15 சதவீதம் மாதம் வட்டி தருவதாக கூறி லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடியை சுருட்டி உள்ளனர்.

இதற்காக மக்கள் மத்தியில் இந்த ஹிஜாவு நிறுவனம் நைஜீரியா மலேசியா சிங்கப்பூர் என பத்து நாடுகளில் கிளைகளுடன் செயல்பட்டு வருவதாகவும் நீங்கள் முதலீடு செய்ய பணம் இந்த நிறுவனத்தின் மூலம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டு அதில் கிடைக்கும் லாபத்தில் தான் உங்களுக்கு பங்கு கிடைக்கப் போவதாகவும் ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்பவர்கள் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாறிவிடுவார்கள் என இன்டர்நேஷனல் லெவெலில் பொய்களை பரப்பி உள்ளனர்.

See also  சென்னைக்கு தென்கிழக்கு 550 கிலோமீட்டர் தொலைவில் மாண்டாஸ் புயல் நிலை கொண்டுள்ளது

அதனுடன், மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெறுவதற்காக இவர்களுடன் நெருக்கத்தில் இருந்து வரும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அழைத்து வந்து மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை புதுக்கோட்டையில் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் 25 லட்ச ரூபாய் காண காசோலையை முதல்வரின் கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்கிவிட்டு அவருடன் எடுத்த புகைப்படத்தையும் முதலீடு செய்தவர்களிடம் காண்பித்து நாங்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள் என்கிற பிம்பத்தை உருவாக்கி கூடுதலாக தொகையை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இதனை நம்பிய அப்பாவி மக்களும் முதல்வர் அமைச்சர் என இவர்கள் நெருக்கமாக இருக்கின்றனர். எனவே நம்மை ஏமாற்றி விட மாட்டார்கள் என எண்ணி தாங்கள் பணம் போட்டது மட்டுமில்லாமல் தங்களுக்கு அருகில் இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த ஹிஜாவு நிறுவனத்தில் பணம் போட ஆலோசனையும் கூறி இருக்கின்றனர்.

இப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அப்பாவி மக்கள் கடனை வாங்கி நகைகளை அடகு வைத்து தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் லட்சக்கணக்கில் இந்த ஹிஜாபு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

See also  காங்கிரஸ் அடி தடிக்கு காரணமாக ரூபி மனோகரன் யார் என தெரியுமா ?

இந்நிலையில் எல்லா மோசடி நிறுவனங்களும் செய்வது போல இந்த ஹிஜாவு நிறுவனமும் முதலில் சில மாதங்கள் முறையாக 15 சதவிகிதம் வட்டி பணத்தை மக்களுக்கு வழங்கி வந்துள்ளது.

ஆனால், போகப் போக நிலைமை சற்று மோசம் அடைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து முறையாக முறையாக  வட்டி பணம் கொடுக்கப்படவில்லை என நிறுவனத்திடம் கேட்டவர்களிடம் உங்களது வட்டி பணம் மீண்டும் உங்கள் பெயரில் செய்யப்பட்டுள்ளது அதற்கு பெயர் டாப் அப் அதற்கும் சேர்த்து அதாவது வட்டிக்கு மீண்டும் வட்டி தரப்படும் என காசு போட்டவர்களின் காதில் பூ சுற்றி உள்ளனர்.

அதன்பின்னர், படி படியாக பணம் தருவதை நிறுத்திக் கொண்ட ஹிஜாவு  நிறுவனம் கடையை சாத்திவிட்டு கம்பி நீட்டி விட்டது.

அப்போதுதான் உண்மை சூழலை புரிந்து கொண்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி, கடந்த மாதம் இந்நிறுவனத்தில் பணியாற்றிய நேரு என்பவரை கைது செய்துள்ளது காவல்துறை ஆனால் தலைமறைவாக உள்ள அதன் நிறுவனர்களான அலெக்சாண்டர் மற்றும் சௌந்தரராஜன் என்ற இரண்டு மோசடி பறவைகளும் வெளிநாடு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Related posts