சென்னை, பெசன்ட் நகர்.
சிறுநீரக நல விழிப்புணர்வுக்காக தனியார் மருத்துவமனை நடத்தும் விழிப்புணர்வு ஓட்டத்தின் நிறைவு விழா சென்னை ஆர்காட் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
வருகிற 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தமிழகத்தில் காய்ச்சலுக்கு போதுமான மருந்து அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகவும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் பொதுமக்கள் உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மத்திய அரசு ஒருங்கிணைக்க நினைக்கிறது ஏற்கனவே தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் ஒருங்கிணைத்தாலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார்.
மேலும் சென்னையில் அதிகமாக இருக்கும் கொசுத்தொல்லை குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகாதுவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும், பீகார் மாநில பாஜக தொடர்ந்து தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான செய்தி பரப்பி வருவது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தமிழக அரசின் செயல்பாட்டை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டி உள்ளார். இதன் மூலம் பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.