6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வானது 15 ஆம் தேதியான இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி 6,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு காலை தேர்வுகள் நடைபெறும் 7,9,11, ஆகிய வகுப்புகளுக்கு மதிய தேர்வாக நடைபெற உள்ளது.
அதன் பின்னர் 24 தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவில் பொது வினாத்தாள் முறை இந்த தேர்வில் கடைபிடிக்க உள்ள நிலையில்
ஒவ்வொரு பள்ளிகள் சார்பிலும் ஒரு வினாத்தாள் பொறுப்பு ஆசிரியரை நியமித்து அந்த வினாத்தாள் பொறுப்பு ஆசிரியர் தேர்வுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு தாள் பொறுப்பு பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து வினா தாள்களை பெற்று சரியான நேரத்தில் தேர்வறையில் உள்ள மாணவர்களிடம் கொடுத்து தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.