தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – I முதல்நிலைத்தேர்வானது மாநிலம் முழுவதும் 1080 மையங்களில் நடைபெற்றது.
இந்த தேர்வை 1 லட்சத்து 90 ஆயிரத்து 957 பேர் எழுதியிருந்தனர்.
இதில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் இரண்டு வினாக்கள் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக எதிர்த்து வரும் சி.ஏ.எ மற்றும் புதியக்கல்வி கொள்கை குறித்து எழுப்பப்பட்டுள்ளது சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது.
A) குறிப்பாக கற்றல் – கற்பித்தல் செயல்முறையின் முழுமையான மறு சீரமைப்பிற்காக புதிய கல்விக்கொள்கை பாரம்பரிய ஆசிரியர் மையமாக இருந்த கற்றல், கற்பவரின் மைய அணுகுமுறையை உருவாக்குகிறது.
R) புதிய கல்விக் கொள்கையில் மாணவர்களின் ஆக்கப்பூர்வ திறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்
என கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில கல்வி கொள்கையை வகுக்கு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கேள்வி தேர்வர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பின் வரும் கூற்றுகளில் எது உண்மையானவை என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
இதற்கு இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும்.
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வந்து 2014 டிசம்பர் 31 க்கு முன் இந்தியாவில் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தர்கள், பார்சிகள் அனைவருக்கும் 12 ஆண்டிற்கு பதில் 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்.
குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் சிஏஎ உதவும் என விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சிஏஎ விற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்களில் திமுக அரசும் ஒன்று. இந்த நிலையில் இந்த கேள்வியும் தேர்வர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு அமைப்பான தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் வாரியத்தில் மாநில அரசின் கொள்கைக்கு எதிரான வினாக்கள் இடம்பெற்றுள்ளது தேர்வர்கள் மட்டுமின்றி பலதரப்பினரையும் உற்று நோக்க செய்துள்ளது.