TNPSC Group-I1 Examination
Held Today 19.11.2022 FN in 38 District Centers.
Allotted Candidates: 3,22,414
Presentees: 1,90,957
Absent: 1,31,457
Present Percentage: 59.23
இன்று நடைபெற்ற குரூப் ஒன் முதன்மை தேர்வில் மூன்று லட்சத்து 22 ஆயிரம் நபர்களுக்கு தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 457 தேர்வர்கள் இன்று தேர்வு எழுத வரவில்லை.. கிட்டத்தட்ட 41 சதவீதம் நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…
இதற்கு முக்கிய காரணமாக பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம்.ஆனால், இன்று அலுவலகங்களின் வேலை நாளான சனிக்கிழமை நடைபெறுவதால் தனியார் அலுவலகங்களில் பணிபுரிந்து கொண்டு அரசு வேலைக்கு முயற்சி செய்வோம் பலர் இந்த தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், பல தேர்வு மையங்கள் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் வசிப்பிடங்களுக்கு மிகத் தொலைவில் அமைக்கப்பட்டிருந்ததா பெரும்பான்மையான நபர்கள் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.