புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் நாம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தினேம் அதன் பிறகு காஷ்மீரில் யாரும் இறப்பதில்லை எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை அவர்களுக்கு நாம் யார் என்ன செய்வோம் என்பது தெரிந்து விட்டது என ஆளுநர் ரவி பேச்சு
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் வளாகத்தில் “விட்டஸ்டா 2023” நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவருடைய மனைவி கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சி தமிழக ஆளுநர் ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்,
இன்று நடந்த காஷ்மீர் பற்றிய பரத நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்கள் நடனம் மிகவும் தத்துரூபமாக இருந்தது.
ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இருந்த காஷ்மீர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும் அது வெறும் புத்த மதம் பற்றியது மட்டும் அல்ல அதையும் தாண்டி பல விஷயங்கள் அதில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது அரசியல் வார்த்தை மட்டும் அல்ல அதில் நம் வாழ்வியலும் அடங்கும்.
காஷ்மீருக்கும் தமிழ்நாடுக்கு பல தொடர்பு உள்ளது இந்தியாவின் பழமையான மொழி தமிழ் என தெரிவித்தார்.
மேலும், சிந்து நதி முதல் காவேரி நதி வரை இந்தியாவில் பல ஆறுகள் உள்ளது அவை நமது கலாச்சாரதத்தை கொண்டு இருக்கிறது.
காஷ்மீர் வரலாறு பற்றி பல ஆய்வுகள் தேவைபடுகிறது, அவை பல முக்கிய விஷங்களை வெளியே கொண்டு வரும் என்றும் நாடு முழுவதும் வேறு வேறு நம்பிக்கைகள் இருக்கலாம் ஆனால் அவை அனைத்தும் ஒன்றே.
18 நூற்றாண்டு முன் வரை பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடக இந்தியா இருந்தது ஆனால் தற்போது அது இல்லாமல் போனதுக்கு காரணம் ஆங்கிலேயே ஆட்சி தான்.
ஆனால் நாம் மீண்டும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டும் அதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அதன் பின்னர் அரசர் ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்து இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது இனிமேல் பிரச்சினை வர கூடாது என்பதற்காக தான்.
ஆனால் அதன் பின் கூட காஷ்மீர் விவகாரத்தில் பல பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன அவை உள் நாட்டு வெளி நாட்டு பிரிவினை வாத சக்திகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார் .
அதே போல இந்தியாவின் சொந்த மக்கள் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. artical 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்த காஷ்மீரில் பல நல்ல விஷயங்கள் தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும்,புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் நாம் சர்ஜிகல் தாக்குதல் நடத்தினேம் அதன் பிறகு காஷ்மீரில் யாரும் இறப்பதில்லை எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை அவர்களுக்கு நாம் யார் என்ன செய்வோம் என்பது தெரிந்து விட்டது என தெரிவித்தார்