சென்னையில் நடைபெறும் ஜி 20 மாநாடு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் இன்று மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டு களித்தனர்.
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராமிய கலை இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கிராமிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர்.
ஜி 20 மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது அதன் முன்னோடியாக நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் சென்னையில் மூன்று நாள் கல்வி கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது இதில் கலந்து கொள்ள ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்
நேற்று சென்னை ஐஐடியில் முதல் நாள் கல்வி கருத்தரங்க நடைபெற்றது, இரண்டாவது நாள் நிகழ்வாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார்
இந்த நிலையில் ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் தமிழகத்தின் கலை கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இன்று மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்பட்டுள்ளனர்
அங்கு புராதன சின்னங்களை கண்டுகளிக்கவும், கலை நிகழ்ச்சிகள், சிற்ப கண்காட்சி அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதை ஜி-20 விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் கடற்கரை கோயில் மற்றும் பஞ்சரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட்டனர்
தமிழகத்தின் கிராமிய கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதில் ஜி20 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கிராமிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.