கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியான பிரியா உயிர் இழந்தது தொடர்பாக, காவல்துறை சார்பில், மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு 12 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
அதில், உயிரிழந்த மாணவி பிரியாவுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை தேவையா ?
எந்த மருத்துவ முகாந்திரத்தின் அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ?
எந்தந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது உடன் இருந்த மருத்துவ பணியாளர்கள் யார்.
இதுபோன்ற
12 கேள்விகளை பெரவள்ளுர் போலீசார் மருத்துவக் கல்வி இயக்குனரத்திடம் கேட்டுள்ளனர். இதற்கான முழுமையான அறிக்கையை, இன்று மாலை ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட இரண்டு பேர் கொண்ட குழுவில் இருக்கும், எலும்பு முறிவு பேராசிரியர் சிங்கார வடிவேலன் மற்றும் ரத்தநாள அறுவை சிகிச்சை பேராசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.
மருத்துவ கல்வி இயக்குனரகம் அளிக்கும் அறிக்கையின் படி, போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வர்.