ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்குள்ள வாக்காளர்களை கவரும் விதமாக அதிமுக திமுக போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வாரி வழங்கி கொண்டிருக்கின்றன.
அதேவேளையில் இந்த போக்கு சமூக ஆர்வலர்களையும் அரசியல் நோக்கங்களையும் பெரும் கவலை அடை செய்துள்ளது இது ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் சனிக்கிழமையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது இதனால் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கவரும் விதமாக பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக அதிமுக கட்சியினர் பாகம் வாரியாக வாக்காளர்களை பிரித்து எத்தனை ஓட்டுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அவர்களுக்கு பரிசு பொரு ட்களை வழங்கி வருவதாக தெரிகிறது.
படுஜோர் பண பட்டுவாடா: கடந்த இரு நாட்களாக வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டு வருகிறது திமுக ரூபாய் 3000 அதிமுக ரூபாய் 2000 வழங்குவதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி வாக்காளர்களுக்கு வார விடுமுறை நாட்களில் ஆட்டு இறைச்சி கோழி இறைச்சி மீன் இறைச்சி வழங்கப்படுவதாகவும் காதணி விழா என்ற பெயரில் பிரியாணி விருந்து நடத்தப்படுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.