கடந்த இரண்டு மாதமாக டன்சோ செயலில் பணியாற்றி வரும் டெலிவரி பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த செயலில் பணியாற்றும் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உணவு ,மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக டெலிவரி செய்யும் சேவையை டூன்சோ என்கிற நிறுவனம் நாடு முழுவதும் வழங்கி வருகிறது. இதில் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ,டன்சோ செயலி மூலம் டெலிவரி கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.ஆனால், டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு 25 முதல் 35 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியும்.
மேலும், டெலிவரி மேன்களுக்கு வடிக்கையாளர்களால் வழங்கப்படும் டிப்ஸ் தொகையை செயலி நிர்வாகம் டெலிவரி நபர்களிடம் கொடுப்பது இல்லை என்றும்
அதனுடன், கடந்த 2 மதமாக 3 நாட்களுக்கு மேல் செயலியை லாக் – இன் செய்யாதவர்களுக்கு ஊக்கத்தொகை ( incentive ) ரத்து உள்ளிட்ட நடை முறைகள் பணியாளர்களை மிகவும் பாதிப்பதாக தெரிவித்து 100க்கு மேற்பட்ட பணியாளர்கள் மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள டன்சோ செயலி அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.