ஜாம்பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக தி நகர் உதவி ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, ஜாம்பஜார் மீரான் சாகிப் தெருவில் பீடா கடை ஒன்றில் கஞ்சா போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்த 7கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் போதை சாக்லேட் விற்பனை செய்து வந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரா யாதவ்(41) என்பதும் பீடா கடை நடத்துவது போல மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு கஞ்சா சாக்லேட்டுகளை கலந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து யாரிடம் கஞ்சா வாங்கினார் உள்ளிட்ட தகவல்களை போலீசார் சுரேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.