குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவரான மனோகரன், சென்னையில் கட்டுமானத் தொழில் செய்துவருகிறார்.தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பதவி வகித்து வரும் ரூபி மனோகரன் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
கட்டுமான துறையில் அதிக ஆர்வம் கொண்ட ரூபி மனோகரனுக்கு 62 வயது ஆகிறது.ரூபி பில்டர்ஸ் என்னும் குடும்பத்தை தொடங்கிய இவர் முன்னாள் விமானப்படை அதிகாரி ஆவர்.விமான நிலைய ஆணையத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் ரூபி பணியாற்றி இருக்கிறார்.இவரது கட்டுமான நிறுவனம் 22 ஆண்டுகளில் 185 குடியிருப்புகளுக்கு மேல் கட்டி உள்ளது .
மேலும் நீங்களும் பில்டர் ஆகலாம் என்ற புத்தகத்தை எழுதிய மனோகரன் கட்டுமானத்துறையில் பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குன்னத்தூரில் பள்ளியையும் நடத்திவரும் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட பல மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்த நிலையில் ரூபி மனோகரனுக்கு அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னாள் இந்நாள் உள்ளிட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து இது பெரிய கலவரமாக ஏற்பட்டு ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கு மண்டைகள் உடைந்து காயங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை துவங்கப்பட உள்ளதாக இருந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் கே எஸ் அழகிரி வர மறுத்துவிட்டார் நேற்று நடந்த தாக்குதலுக்கு ரூபி மனோகரன் தான் காரணம் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக தீர்மானம் போட்டால் மாவட்ட தலைவர் கூட்டத்துக்கு வருகிறேன்.
இல்லை என்றால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று சத்தியமூர்த்தி பவன் நிர்வாகிகளுடன் கே எஸ் அழகிரி தெரிவித்ததால் இன்று காலை அவருக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள்.
இதனை தொடர்ந்து மாலை வேலையில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அழகிரி தலைமையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் ரூபி மனோரனை நீக்குவதற்கு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ரூபி மனோகரன் மாநில பொருளாளர் என்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு அதன் பிறகு முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.