26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
EducationMemesTamilnaduTweetsViral

சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி – விசாரனை குழு அமைப்பு ….

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நேற்று 18.11.2022 இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தமிழ் தேர்வுக்கு பதிலாக வேறு வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை செய்ய லட்சுமி பிரியா தொழில்நுட்பக் கல்வி ஆணையர், கிருஷ்ணசாமி உறுப்பினர்-செயலர் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், இளங்கோ ஹென்றி தாஸ் அரசு இணைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்துள்ளது உயர்கல்வித்துறை.

இரண்டு மாதங்களுக்குள் வினாத்தாள் மாறியது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கு அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டும்.

இத்தவருக்கு பொறுப்பான அதிகாரிகள் அலுவலர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

See also  62 மணி நேரத்திற்கு பின் உயிர் பிழைத்த பெண்.. உயிருக்காக போராடும் துருக்கி மக்கள்!!

குழுவின் விசாரணைக்கு தேவையான உரிய அலுவலக வசதியை சென்னை பல்கலைக்கழகம் செய்து தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts