27.7 C
Tamil Nadu
28 May, 2023
PoliticalTamilnadu

ரயிலில் பயணிக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் !

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக ரயில் பயணம் மேற்கொள்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக வரும் 8ம் தேதி தென்காசி செல்கிறார்.

இதற்காக வரும் 7ம் தேதி இரவு சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 8:40மணிக்கு புறப்படும் இரயில் 8ம் தேதி காலை 7.30மணிக்கு தென்காசி சென்றடையும்.

பின்னர் முதலமைச்சர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

See also  வெளியானது கருத்துக்கணிப்பு - ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி யார் பக்கம்?

அதனை தொடர்ந்து, மதுரை செல்லும் முதலமைச்சர், இரவு மதுரையில் தங்குகிறார்.

பின்னர் 9ம் தேதி காலை மதுரையில் மாநகராட்சி வளைவை திறந்து வைக்கும் அவர், அம்பேத்கர் சிலையையும் திறந்துவைக்கிறார். அன்றைய தினமே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Related posts