இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், எம்.எஸ்.தோனி, ஓபிஎஸ், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் பேசிய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன்.
அமித்ஷா அவர்களின் பிசியான ஷெட்யூலுக்கு இடையே இங்கு வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன் எனத் தெரியவில்லை. அதனை நினைத்து பெருமையாக உள்ளது.
கொள்கை ரீதியாக மட்டுமல்ல, நிதி எகனாமிகளாகவும் அவர் இந்தியாவை வழிநடத்திச் செல்கிறார்.
ஒரே புள்ளியில் தனது கவனத்தைச் செலுத்தி, அதில் வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்படிப்பட்டவர் இங்கு வந்திருப்பது எனக்கான பெருமையாக கருதவில்லை. இந்தியா சிமெண்ட்ஸை நிறுவியவர்களின் பெருமையாக கருதுகிறேன்.
1968இல் என் தந்தை இறந்தபோது நான் இந்தியாவுக்கு வந்தேன். இந்தியாவின் சிமெண்ட் துறையின் அளவு 91 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், இப்போது 400 மில்லியனை தாண்டி அதிகரித்துவிட்டது.
உலகளவில் அதிக சிமெண்ட் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனா 2.6 பில்லியன் டன்னுடன் முதல் இடத்திலும், இந்தியா 406 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 72 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதனுடன் ஒபிடும்போது, இங்கிலாந்தைவிட இந்தியா சிமெண்ட்ஸின் உற்பத்தி அளவு அதிகம்.
சிமெண்ட் தயாரிக்க பயன்படும் லைம்ஸ்டொக்ன்களை சுரங்கம் அமைத்து தோண்ட அனுமதி வாங்கிய பிறகு, அந்த நிலத்தின் உரிமையாளருடன் பேரம் பேசிக்கொள்ள இந்தியா முழுவதும் அனுமதி உள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் லைம்ஸ்டோன் சுரங்கம் அமைப்பதற்கு விண்ணப்பம் செய்யவே நாம் அந்த நிலத்தை நாம் உடமையாக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என தொழில்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு கேட்கிறேன் என நினைக்கவேண்டாம் என்றார்.
விளையாட்டுகளை ஊக்குவிக்கிறோம். 1960 களில் ரஞ்சி ட்ராபி அணியில் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் வீரர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீனிவாசன் வெங்கட்ராகவன் எங்களிடமிருந்து வந்தவர் தான். பின்னர் அதை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என எண்ணி சி.எஸ்.கே அணியை உருவாக்கினோம். அந்த அணியின் தலைவர் தோனி இதோ இங்கிருக்கிறார் என தெரிவித்தார்.
தற்போது, சிஎஸ்கே அணி ஐபிஎல் இன் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.