27.7 C
Tamil Nadu
28 May, 2023
PoliticalTamilnaduViral

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் – தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்த அமித்ஷா

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், எம்.எஸ்.தோனி, ஓபிஎஸ், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

விழாவில் பங்கேற்றத்திற்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் திரு சீனிவாசன் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னுடைய நண்பர் ஏனெனில் 75 ஆண்டுகாலம் ஒரு நிறுவனம் வந்து பூர்த்தி செய்கிறது என்றால் அந்த துறையில் மிகப்பெரிய லீடராக இருக்கிறது என்று அர்த்தம். அவருக்கு என் நல்வாழ்த்துக்கள்.

கிரிக்கெட் தொடர்பாக எங்களுக்குள்ள ஒரு நல்ல உறவு வளர்ந்து கொண்டு இருந்தது. விளையாட்டுத்துறையை பொறுத்த வகையிலே அவருடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் 100% வெற்றியாக மாற்றக்கூடிய திறமை திரு சீனிவாசன் அவர்களுக்கு உண்டு. அதே போல விளையாட்டு வீரர்களுக்காக அதிகம் அவர் நலனுக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட்டவர் திரு சீனிவாசன் அவர்கள்.
இன்று இந்தியா சிமெண்ட் 75 ஆம் ஆண்டு மிக பெரிய இலக்கை எட்டி இருக்கிறது .

See also  சபரிமலை - ஆன்லைன் தரிசனம் இல்லை

எந்த தேசத்திலும் நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பை பொறுத்துதான் இருகிறது. நம் நாட்டிற்கு தேவையான சிமெண்டை சுயமாக தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். சிமெண்ட்துறையில் மட்டுமின்றி ஏற்றுமதி,கப்பல் துறை போன்ற வற்றிலும் முத்திரையை பதித்து கொண்டு இருக்கிறார்கள்.

நம்முடைய நாடு வளர்ச்சி பாதையை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கிறது. 2025ம் ஆண்டில் இந்தியாவின் மதிப்பு 5 டிரிலியன் டாலரில் இருக்கும். ஒரு ஆய்வு அறிக்கையில் 2027 ம் ஆண்டு தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கும்.

பலவிதமான புதிய வாய்ப்புகளை இந்திய அரசு உருவாக்கிக் கொடிக்கிறது. புதிய தொழிற்சாலைகள்
சென்னை திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் ஓசூர் போன்ற பகுதிகளில் உருவாக்குவது இந்த அரசு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆய்வு மற்றும் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கிறது. ஊழல் அற்ற ஆட்சியை உலகுக்கு எடுத்துக்காட்ட தற்போது அரசு இருக்கிறது.

இருண்ட பகுதியில் ஒளிரும் நாடக இந்தியா உள்ளது. செல்போன் மூலமும் வங்கி மூலமும் பரிமாற்றம் செய்கிற மதிப்பு 12.11 இலட்சம் கோடி அளவிற்கு பணம் பரிமாற்றம் நடக்கிறது.

See also  பெண்களுக்கான பாதுகாப்பிற்காக இது - பல்கலைக்கழக மானிய குழு !

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்துகிறார்.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைக்காக 8900 கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டம் 2 பாகத்திற்காக 3770 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1440 கோடி ரூபாயில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டது.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ் மூத்த மொழி தொன்மையான மொழி. ஆகவே தமிழ் மொழியின் மேன்மை மொத்த இந்தியாவுக்கும் பெருமை.

மருத்துவ கல்லூரியிலும்,பொறியியல் கல்லூரியிலும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் மொழியிலையே பாடத்தை கொடுக்க வேண்டும். பாடத்திட்டங்களை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன் என தெரிவித்தார்.

அதன்பின்,இந்தியா சிமெண்ட்ஸின் பவள விழா நினைவுத் தூணை காணொலி காட்சி வாயிலாக அமித்ஷா திறந்து வைத்தார். 3D பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பவள விழா நினைவுத் தூண் இந்தியா சிமெண்ட்ஸின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மேடையில் அறிவிக்கப்பட்டது.

இந்தியா சிமெண்ட்ஸின் பவள விழாவையொட்டி தபால் தலையை அமிஷ் ஷா வெளியிட்டார்.

இந்தியா சிமெண்ட்ஸில் நீண்ட காலம் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Related posts