2022-2023ம் கல்வி ஆண்டில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சுற்றறிக்க அனுப்பி உள்ளது.
அதில் 100% மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக ஆண்டு தோறும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை மீண்டும் பள்ளிகள் அல்லது சிறப்பு வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2022-20223 பள்ளி செல்லா அல்லது இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் சேமித்த விவரங்களின் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 19ஆம் தேதி முதல், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் மூலமாக குழுக்கள் அமைத்து இடைநின்ற மாணவர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19.12.2022 முதல் 11.01.2023 வரை கணக்கெடுப்பு களப்பணி மேற்கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள், அதிகமாக விடுமுறை எடுத்து பள்ளியிலிருந்து இடம் நின்ற குழந்தைகள் ஆகியோர் பள்ளி செல்லாக் குழந்தைகளாக கருதப்படுவர்.