சேலம்: காலை உணவு திட்டத்தின் மூலமாக பள்ளிகளின் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளகளிடம் பேசிய சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், காலை உணவுத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடந்து பேசிய அவர், இத்திட்டத்தால் சரியான நேரத்திற்கு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அதேநேரம், திட்டம் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. காலை உணவு திட்டம் விரைவில் அனைத்து பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும்.
சில மாவட்டங்களில் குழந்தை திருமணம் நடைபெறுகின்றது.மாவட்ட ஆட்சியர்கள் மூலம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
காதல் திருமணங்களும் நடைபெற்று வருகின்றது. அதேநேரம் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என்று தெரிவித்தார்.